புதுடெல்லி: ரூ.232 கோடி மோசடி செய்த வழக்கில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த மேலாளரை சிபிஐ கைது செய்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தின்(ஏஏஐ) மூத்த மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்) ராகுல் விஜய். இவர் டேராடூன் விமான நிலையத்தில் பணியாற்றிய மூன்று ஆண்டுகளில் போலி கணக்கு மூலம் ரூ.232 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிதி அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவரை சிபிஐ கைது செய்துள்ளது.
+
Advertisement