புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் மேக்ரான், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று பேசினார். அப்போது உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக ஊடக பதிவில், ‘‘எனது நண்பர் மேக்ரானுடன் மிகச்சிறந்த உரையாடல் நடந்தது.
மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் மோதல் விவகாரத்தில் அமைதிக்கான முயற்சிகள் குறித்த எங்கள் பார்வையை பகிர்ந்து கொண்டோம். இந்தியா, பிரான்ஸ் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.