பிரான்ஸ் ஓபன் பேட்மின்டன் சாத்விக்-சிராக் ஜோடி ஏமாற்றம்: பெண்கள் பிரிவில் சிம்ரன் சிங், கவிபிரியா இணை முன்னேற்றம்
செசோன் செவிங்க்: பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டி செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் இந்தியாவிஜ்ன் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் ரஹமத் ஹிதயத்-முகமது ரியான் அர்டியாண்டோ ஜோடியுடன் மோதியது. இதில் 21-18, 22-20 என்ற செட் கணக்கில் இந்தோனேசியா ஜோடி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவை சேந்த சாய் பிரதீக், பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய் ஜோடி, மலேசியாவை சேர்ந்த ஒய்.எஸ். ஓங், இ.ஒய். தியோ ஜோடியுடன் மோதியது. இதில் 18-21, 18-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வியடைந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றில் இந்தியாவை சேர்ந்த உன்னதி ஹூடா, சீனாவை சேர்ந்த இசட்.ஒய். வாங்குடன் மோதினார்.
இதில் 14-21,11-21 என்ற செட் கணக்கில் வென்று வாங்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சிம்ரன் சிங், கவிபிரியா செல்வம் ஜோடியும், ஸ்வேதபர்ண பாண்டா, ருதபர்ண பாண்டா ஜோடியும் மோதின. இதில் 21-9, 21-11 என்ற செட் கணக்கில் சிம்ரன் சிங், கவிபிரியா ஜோடி சென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
