பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு 47வது பிரதமராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 5ஆம் தேதி பிரான்ஸ் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி முன்னாள் நிதியமைச்சர் புருனே லு பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை(6ஆம் தேதி) பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக செபாஸ்டின் அறிவித்தார். இந்நிலையில் பிரான்ஸ் அரசியலில் புதிய திருப்பமாக செபாஸ்டின் லெகோர்னு மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். நடப்பாண்டு இறுதிக்குள் புதிய அமைச்சரவையை நியமித்து, பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என பிரதமர் செபாஸ்டினுக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவுறுத்தி உள்ளார்.