இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழவல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி லாகூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து இம்ரான் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த வழக்குகளில் தண்டனை பெற்றதால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று இம்ரான் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றது. இதனை தொடர்ந்து இம்ரானின் அறிவுறுத்தலின்பேரில் நாடு முழுவதும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பாகிஸ்தான் தெஹ்ரிக் கட்சியை சேர்ந்த தொண்டர்களை போலீசார் கைது செய்யத் தொடங்கினார்கள். லாகூரில் சுமார் 150 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
+