பாரீஸ்: முன்னாள் பிரான்ஸ் அதிபர் சர்கோசி நிகோலஸ் லிபியா பிரச்சார நிதி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு லிபியத் தலைவர் மொயம்மர் கடாபி அரசிடமிருந்து சட்டவிரோதமாக பிரச்சார நிதியை பெற்றதாக பிரான்சு முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் அதிபர் சர்கோசி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உடனடியாக அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்கவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து சர்கோசி மேல்முறையீடு செய்யலாம்.
+
Advertisement