Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தலில் சாதித்த, வீழ்ந்த முன்னாள் முதல்வர்கள்

மக்களவை தேர்தலில் பல மாநிலங்களில் முதல்வராக இருந்த முன்னாள்கள் பலர் களம் இறங்கினர். அவர்களின் வெற்றி தோல்வி விவரம் வருமாறு:

1. சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ்பாகெல் அங்குள்ள ராஜ்நந்த்கான் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அங்கு பா.ஜ வேட்பாளர் சந்தோஷ் பாண்டேவிடம் 45,394 ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்னடைவில் இருந்தார்.

2. அரியானா முன்னாள் முதல்வர் மனோகர்லால் கட்டார் பா.ஜ வேட்பாளராக கர்னூல் தொகுதியில் களம் இறக்கப்பட்டார். அங்கு அவர் 2,11,115 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

3. மபி முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அங்குள்ள விதிஷா தொகுதியில் களம் இறக்கப்பட்டார். அவர் 8,18,626 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார்.

4. ராஜ்கர் தொகுதியில் மபி முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார். அங்கு பாஜ வேட்பாளர் ரோட்மால் நாகர் திக்விஜயை விட 1 லட்சத்து 12 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.

5. கர்நாடகமாநிலம் ஹாவேரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை 43,513 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்தசுவாமி கட்டதேவர்மத்தை வீழ்த்தினார்.

6. பீகார் முன்னாள் முதல்வரும், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சி அங்குள்ள கயா மக்களவை தொகுதியில் 1,01,812 ஓட்டு வித்தியாசத்தில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் குமார் சர்வ்ஜீத்தை வீழ்த்தினார்.

7. திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப்குமார் தேப் அங்குள்ள திரிபுரா மேற்கு தொகுதியில் பா.ஜ வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவர் 6 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

8. பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி அங்குள்ள ஜலந்தர் தொகுதியில் 1.75 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் பா.ஜ வேட்பாளர் சுசில்குமார் ரிங்குவை வீழ்த்தினார்.

9. காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்அப்துல்லா 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் அப்துல் ரஷித்திடம் தோல்வி அடைந்தார்.

10. காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி அங்குள்ள அனந்தநாக் ராஜெளரி தொகுதியில் 2,79,279 ஓட்டு வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மியான் அல்டாப் அகமதுவிடம் தோல்வி அடைந்தார்.

11. அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனாவால் அங்குள்ள திப்ருகார்க் தொகுதியில் 2.76 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.