திருவனந்தபுரம்: கேரள மாநில முன்னாள் பாஜ தலைவரான சுரேந்திரன் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டி யிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளருக்கு ரூ.2 லட்சம் பணம் தந்து போட்டி யில் இருந்து விலகச் செய்ததாக புகார் எழுந்தது. இதில், சுரேந்திரன் மாவட்ட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.
இதில் பதிலளிக்க சு சுரேந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப் பட்டது.