சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி.சத்தியபாமா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுக தலைமை குறித்தும், பிரிந்தவர்கள் ஒன்றினைய வேண்டும் என்பது குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று செங்கோட்டையன் கட்சியில் இருந்த்து நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவரது மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பொறுப்பு என கட்சி பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவரது அருகில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாபா தற்போது கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாபா தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 4 ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக துணை செயலாளர்களும், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் என 7 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாபா கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படவில்லை என கூறப்பட்டுவந்த நிலையில் தற்போது சத்தியபாபா கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.