Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசின் வன விழா வார போட்டிகள் - அசத்திய மாணவி!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்துவரும் சட்ட கல்லூரி மோன்யா ராவ் வனவிலங்குகள் வாரவிழா 2025 போட்டி களில் முதலிடம் பிடித்து அசத்தி வருகிறாள். சிறுவயதிலிருந்தே பல்வேறு மேடை பேச்சுகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்று சாதித்துள்ளார். கராத்தேயில் மாநில தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு 18 தங்கம், 15 வெள்ளி பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். அதே போன்று அவரது பன்முக திறமைக்காக 250 க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி யோகா, ஓவியம் போன்ற பல கலைகளிலும் ஆர்வம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில் வனவாரவிழா 2025 கடந்த மாதம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதில் வனவிலங்கு குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. அதில் மனித மற்றும் வனவிலங்கு உயிரினங்களுக்கு இடையேயான சகவாழ்வு, சுற்றுச்சூழல் வனம் மற்றும் வன உயிரினம், சக வாழ்வின் மூலம் வன உயிரினங்களை பாதுகாத்தல் குறித்த அவசியம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் இப்போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு அதிகாரி மனிஷ் மீனா IFS அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இதில் சட்ட கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவி மோன்யாராவ் கலந்து கொண்டு பேச்சு போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளார்.

கட்டுரை போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். மாணவி மோன்யா ராவ் இதே போட்டியில் ஐந்தாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் கராத்தே போட்டிகளில் பிளாக் பெல்ட் 2வது டான் வென்றுள்ளார் என்பதும் இவரது பன்முக திறமைக்கு சான்று. சிறுவயது முதலே பேச்சு போட்டிகளில் கலந்து கொள்வது மேடைகளில் பேசுவது மற்றும் கராத்தே போட்டிகளில் பதக்கங்கள் வெல்வது என இவரது சாதனைகள் ஏராளம். சட்ட கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞராகி ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி செய்ய வேண்டும் என்பதே லட்சியமாக வைத்துள்ளார். எதிர்காலத்தில் நீதிபதியாக வேண்டும் என்பது இவரது பெருங் கனவு. இவரது சாதனைகளுக்காக நிறைய பாராட்டுதல்களும், பரிசுகளும் விருதுகளும், மெடல்களும் கிடைத்தது. இவரது உழைப்பிற்கு கிடைத்த சான்று. சட்ட படிப்பும் கராத்தே விளையாட்டும் இவரது இரண்டு கண்கள் என்கிறார். இந்த இளம் சாதனை மாணவி. தமிழ், ஆங்கிலம், இந்தி , தெலுங்கு என நான்கு மொழிகளை சரளமாக பேசுகிறார். இதுமட்டுமின்றி ஓவியம் யோகா என அனைத்திலும் அசத்தி வருகிறார்.

Martial arts of Prodigy awards, சிறந்த தன்னம்பிக்கை நாயகி விருது, அன்புத்தமிழச்சி விருது, சிறந்த பேச்சாளர் விருது, best dream women award உட்பட பல்வேறு விருதுகள் இவருக்கு கிடைத்தது இவரது திறமைக்கான பேரும் சான்று. இன்னும் விளையாட்டிலும் படிப்பிலும் நிறைய சாதிக்க துடிக்கிறார் இந்த சாதனை மாணவி.

- தனுஜா ஜெயராமன்