வாஷிங்டன்: இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் பணி அனுமதியை நீட்டிப்பதில் அமெரிக்கா புதிய கெடுபிடியை விதித்துள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்ற டிரம்ப் அமெரிக்காவை பாதுகாப்பேன் என்ற கொள்கையுடன் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி ஐ -765 படிவத்தை தாக்கல் செய்தால் தானாகவே பணி அனுமதி நீட்டிப்பு கிடைக்கும் முறையை ரத்து செய்தார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் இன்றுமுதல் பணி அனுமதி நீட்டிப்பு பெற உரிய ஆய்வுகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.
பணி அனுமதி நீட்டிப்புக்கு 180 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கெடுபிடி விதித்துள்ளது. அமெரிக்காவில் பணியாற்றுவது சலுகைதான்; உரிமை அல்ல என்றும் அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
  
  
  
   
