வாஷிங்டன்: அமெரிக்காவில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை (இஏடி) தானாகவே நீட்டிக்க அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்களை, குறிப்பாக வெளிநாட்டுப் பணியாளர்களில் பெரும் பகுதியைக் கொண்ட இந்தியர்களை கடுமயைாக பாதிக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அரசு அறிக்கையில், அக்டோபர் 30, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு தங்கள் இஏடி- ஐ புதுப்பிக்க தாக்கல் செய்யும் வெளிநாட்டினர், இனி தங்கள் இஏடி- ன் தானியங்கி நீட்டிப்பைப் பெற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் இஏடி காலாவதியாகும் தேதிக்கு 180 நாட்களுக்கு முன்பு புதுப்பித்தல் விண்ணப்பத்தை தாக்கல் செய்து, அதை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். வெளிநாட்டவர் இஏடி புதுப்பித்தல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் காத்திருக்கிறாரோ, அந்த அளவுக்கு தற்காலிக பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement 
 
  
  
  
   
