Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வெளிநாட்டு பெண்களுடன் ஜாலி மனைவியை கொன்ற இன்ஜினியர் ஈரான் நாட்டு காதலியுடன் கைது: 50 அடி பள்ளத்தில் வீசிய சடலம் மீட்பு

திருவனந்தபுரம்: மனைவியை கொன்று 50 அடி பள்ளத்தாக்கில் உடலை வீசிய சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் அவரது ஈரான் நாட்டு காதலியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஏற்றுமானூர் அருகே உள்ள காணக்காரி பகுதியை சேர்ந்தவர் சாம் ஜார்ஜ் (59). இவரது மனைவி ஜெஸி சாம் (49). இவர்களுக்கு 28 வயதில் ஒரு மகளும், 25 மற்றும் 23 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

சாப்ட்வேர் இன்ஜினியரான சாம் ஜார்ஜ் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா குறித்த பட்ட ேமற்படிப்பும் படித்து வருகிறார். சாம் ஜார்ஜுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக வெளிநாட்டு பெண்களுடன் அதிக தொடர்பு இருந்துள்ளது. அவர்களை வீட்டிற்கும் அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 15 வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சாம் ஜார்ஜுக்கு கோட்டயத்தில் 4.5 ஏக்கர் நிலமும், கோவா மற்றும் கோவளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளன. இதனால் கணவன், மனைவிக்கிடையே சொத்து தகராறும் இருந்து நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் உள்ள மகள், தாய் ஜெஸியை பலமுறை போனில் அழைத்தும் கிடைக்காததால், போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். ஆனால் வீட்டில் கணவன், மனைவி இருவரும் இல்லை.

நேற்று முன் தினம் இடுக்கி மாவட்டம் உடும்பன்னூர் அருகே உள்ள செப்புக்குளம் பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில் ஜெஸி சாமின் உடல் கிடப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சாம் ஜார்ஜ் மைசூரூவில் வைத்து கைது செய்யப்பட்டார். விசாரணையில் மனைவி ஜெஸியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சாம் ஜார்ஜுடன் கோட்டயம் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஈரான் நாட்டு காதலியும் கைது செய்யப்பட்டுள்ளார்.