வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூட ரயிலையே தேர்வு செய்யும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்: என்ன காரணம் தெரியுமா?
பியோங்யாங்: நவீன தொழில்நுட்ப காலத்திலும் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்க என்ன காரணம் என்பது பிணவருமாறு; இருப்பு திரையிலான வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், எப்போது பயணிக்கும் ரயில் வண்டி இது. கிம் மட்டுமல்ல கிம் வம்சத்தவருடனும் பின்னிப்பிணைந்த இணைப்பு கொண்டது இந்த ரயில். வடகொரிய அதிபராக பொறுப்பேற்று கொண்ட பிறகு 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் சீனாவுக்கு சென்றபோது சரி, 2019ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போதும் சரி, இந்த ரயிலில் தான் சென்றார் கிம்.
ரஷ்ய பயணங்களுக்கும் விமான பயணத்தை தவிர்த்து ரயிலை தான் தேர்வு செய்கிறார் கிம். அப்படி என்ன இருக்கிறது இந்த ரயிலில், குண்டுகள் துளைக்காத இந்த ரயில், நகரும் கோட்டை என அழைக்கும் அளவுக்கு அதிஉயர் பாதுகாப்பு வசதிகள் கொண்டது. மணிக்கு 60கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலில் சுமார் 15 பெட்டிகள் இருக்கின்றன. கான்ப்ரன்ஸ் அறை, படுக்கை அறை, சமையல் அறை என எல்லா வசதிகளையும் கொண்டது. ரஷ்யா, சீனா, கொரியா, ஜப்பானிய மற்றும் பிரெஞ்சு உணவுகள் எப்போது வேண்டுமானாலும் கிடைக்குமாம்.
மருத்துவக்குழு மற்றும் பாதுகாப்பு வீரர்களுடன் கவச பாதுகாப்புடன் கூடிய 2 மெர்சிடஸ் கார்கள் எப்போதும் ரயிலில் இருக்கும். உயர் பாதுகாப்பு கொண்ட இந்த ரயிலை நாட்டு மக்களிடம் உரையாடவும் கிம் பயன்படுத்துகிறார். கிம் ஜான் உன் தனக்கென தனியாக ஜெட் விமானம் வைத்திருந்தாலும் கூட தனது தந்தையும், முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் வழியில் ரயிலை பயன்படுத்துகிறார். 2011ம் ஆண்டு ரயில் பயணத்தின் போதுதான் கிம் ஜாங் இல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வடகொரிய நிறுவனரும், கிம்மின் தாத்தாவும் இறுதி வரை ரயிலையே பயன்படுத்தி வந்துள்ளார்.