கால்பந்து வீரருடனான திருமண உறவு முறிந்தது ‘டேட்டிங்’ செயலியில் புதிய துணையை தேடும் நடிகை: 3 குழந்தைகள் உள்ள நிலையில் திருப்பம்
லண்டன்: காதல் திருமண வாழ்க்கை முறிவுக்குப் பிறகு தனிமையில் இருந்த பிரபல நடிகை, தற்போது புதிய துணையைத் தேடத் தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே ஆவலைத் தூண்டியுள்ளது. இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி தொடரான ‘கொரோனேஷன் ஸ்ட்ரீட்’ மூலம் புகழ்பெற்ற நடிகை ஹெலன் ஃபிளானகன், கால்பந்து வீரர் ஸ்காட் சின்க்ளேருடன் நீண்ட காலமாக உறவில் இருந்தார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு இருவருக்கும் இடையேயான திருமண பந்தம் முறிந்தது. அன்றிலிருந்து தனிமையில் வாழ்ந்து வந்த ஹெலன், தனது முழு கவனத்தையும் குழந்தைகள் வளர்ப்பில் செலுத்தி வந்தார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹெலன் தனது தனிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மீண்டும் தனது காதல் வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக, இம்மாத தொடக்கத்தில் அவர் ‘ரயா’ என்ற பிரத்யேக ‘டேட்டிங்’ (திருமணத்திற்கு முந்திய உறவு) செயலியில் இணைந்துள்ளார். ‘ரயா’ என்பது திரைப்பிரபலங்கள், பெரும் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிரத்யேக ‘டேட்டிங்’ செயலியாகும்.
சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் இரவு நேர விருந்து ஒன்றில் ஹெலன் காணப்பட்ட நிலையில், அவர் இந்த செயலியில் இணைந்த தகவல் வெளியாகியுள்ளது. இது, அவர் தனது புதிய துணையைத் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதை உறுதி செய்துள்ளது.