தூத்துக்குடியில் ரூ. 1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் அமைக்கிறது: அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு
சென்னை: தூத்துக்குடியில் ரூ. 1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் அமைக்கிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலை அமைகிறது. உற்பத்தி மையத்தில் பிஸ்கட், மசாலாப் பொருட்கள், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்கப்படும். தூத்துக்குடி சிப்காட்டில் அமைக்கப்படும் புதிய ஆலையால் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்