Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவே மருந்து

* கறிவேப்பிலையை அரைத்து தினமும் நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இளநரை மறையும்.

* வெள்ளைப் பூண்டையும், வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் தேமல் மறையும்.

* காலையில் பல் தேய்த்ததும், வெறும் வயிற்றில் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் கரையும். தொப்பையும் குறையும்.

* குளியல் அறையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரத்தை ஒரு பாலிதீன் பையில் கட்டி தொங்க விட்டால் துர்நாற்றம் வராது.

* இஞ்சியை நறுக்கி தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

* வெள்ளைப் பூண்டை அரைத்து எலுமிச்சை பழச் சாற்றில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் பேன் தொல்லை போய்விடும்.

* ஏப்பம் வரவேண்டுமென்றால் ஒரு பூண்டை சிறு கல்உப்பையும் சேர்த்து மென்று தின்றால் எளிதில் ஏப்பம் வரும்.

* கொள்ளு ரசம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். உடல் பருமன் குறையும்.

* சுக்கு, மிளகு, சீரகம், இட்டு எண்ணெய் காய்ச்சி தலைக்கு தேய்த்தால் நீர்க்கோர்வை இறங்கும். ஈர், பேன் ஒழியும்.

* தினமும் காலை-மாலை கடலை மாவில் முகம் கழுவி வந்தால் சுருக்கம் வராது. முதுமை தெரியாது.

v சாதம் வடிக்கும் நீரில் சிறிது மஞ்சள் தூளும், பனங்கற்கண்டு கலந்து சூடாக சாப்பிட்டால் வயிற்று உப்புசம் நீங்கும்.

- விமலா சடையப்பன்