Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவே மருந்து

* குங்குமப் பூவை கர்ப்பிணிகள் பாலிலோ தாம்பூலத்துடனோ உட்கொள்ள குழந்தை சுகமாகப் பிறக்கும்.

* சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து தலைவலிக்கு பற்றுப் போட குணம் காணலாம்.

* சீரகத்தை தூளாக்கி தேனில் அல்லது பாலில் குழைத்து உண்ண பித்தம் சரியாகும். வாயுத்தொல்லைகள் குறையும்.

* கொத்த மல்லியுடன் பால், சர்க்கரை சேர்த்து காபியாக்கி அருந்த இதயம் பலம் பெறும்.

* தண்ணீர் விட்டான் கிழங்கை உண்டு வர, தாது பலம் பெருகி உடல் புஷ்டி உண்டாகும்.

* வெங்காயத்துடன் வெல்லம் சேர்த்து உண்ண பித்தத்தால் உண்டாகும் வாய்க் கசப்பு நீங்கும்.

* கற்பூரத்தை கொதிநீரில் விட்டு ஆவி பிடிக்க காய்ச்சல் குணமாகும்.

* கருணைக்கிழங்கைத் தொடர்ந்து வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால் மூலநோய் முதலில் கட்டுப்பட்டு நாளடைவில் குணமாகும்.

* பீட்ரூட்டை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் நரம்புகள் வலிமை பெறும். மலச்சிக்கல் வராது.

* சுரைக்காய் சதைப் பகுதியை பிசைந்து கட்டினால் கால் எரிச்சல் குணமாகும்.

* வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து விழுதாக அரைத்து பருக்களின் மீது தடவினால் பருக்கள் நீங்கும்.

* இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூரப் பயணம் செய்பவர்கள் காதில் பஞ்சை அடைத்துக்கொண்டால் ஜலதோஷம், காதுவலி வராமல் தவிர்க்கலாம்.

* வாழைத் தண்டு பொரியல் அடிக்கடி சாப்பிட்டால் குடலில் சிக்கிய முடி, நஞ்சு வெளியேறும்.

* பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து தடவினால் காயம் சீக்கிரம் ஆறும்.

* தக்காளிப் பழத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி முகத்தில் வைத்திருந்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகச் சுருக்கம் நீங்கும்.

* எலுமிச்சை சாற்றுடன் சம அளவு துளசிச் சாறு கலந்து பூசி வந்தால் தேமல் மறைந்து போகும்.

* மிளகு, பனை வெல்லம், நெய் மூன்றையும் கலந்து சாப்பிட்டு வர, தொண்டை வலி குணமாகும்.

* பலாச்சுளைகளை நெய், ேதன் தொட்டு சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். கூடவே உடம்பு வலுவாகும். மூளை பலப்படும்.

* உடம்பில் எங்காவது சுளுக்கிக் கொண்டால் சுளுக்கிய இடத்தில் ஐஸ்கட்டி வைத்தால் வலி குறைந்து, சுளுக்கு சரியாகும்.

* மாம்பழத்துடன் தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் உடல் பளபளப்பாகும்.

* முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பற்கள் உறுதியாகும்.

- அ. யாழினி பர்வதம், எல். நஞ்சன்