Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உணவே மருந்து

*வெந்தயத்தைப் பொடி செய்து தினசரி உண்டு வர நீரிழிவு கட்டுப்படும்.

*அதிமதுரத்தை நீர்விட்டு காய்ச்சி அந்நீரை அருந்த பித்தத்தால் வரும் தலைச்சுற்றல் குணமாகும்.

*வெள்ளை வெங்காயத்தை பச்சையாக மென்று தின்ன நீர்கட்டு, நீர் எரிச்சல் குணமாகும்.

*இஞ்சி முரப்பா உண்டு வருபவர்களுக்கு வயிற்று மந்தம், மார்புசளி, இரைப்பு, புளியேப்பம் ஆகியவை வராது.

*இலவங்கத்தினை பொடியாக்கி பற்பொடியுடன் பயன்படுத்த, பற்களின் பலம் அதிகரிப்பதோடு, பல்வலி, ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் ஆகியவை குணமாகும்.

*கத்தரிக்காயை உணவில் சேர்த்து வருபவர்களுக்கு ஆஸ்துமா, ஈரல் நோய், காசநோய் போன்றவை அண்டாது.

*கறிவேப்பிலை சாறுடன் பால் சேர்த்து தலைக்கு தேய்த்துக் குளிக்க நரைமுடி வராது.

*சுக்கினை சர்க்கரை, பாலில் சேர்த்து ‘சுக்கு காபியாக அருந்த வயிற்றுக் கோளாறுகள் நீரேற்றம், வாதநோய்கள், பல்வலி, காதுவலி ஆகியவை குணமாகும்.

*கசகசாவை ஊறவைத்து அரைத்து பிழிந்து பாலை தாய்மார்கள் உண்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

*கேரட் சாறுடன் 10 மிளகு தூளை சேர்த்து தேன் கலந்து அருந்த, தேவையில்லாத ஊளைச் சதைகள் குறைந்து உடல் அழகாக மாறும்.

* ஓரிதழ் தாமரையுடன் சம அளவு கீழாநெல்லியை அரைத்து நெல்லிக்காயளவு உண்டு வர, வாலிப வயதில் வரும் வயோதிகத் தோற்றம் மாறும்.

*தினசரி உணவில் கொத்தமல்லி துவையலைச் சேர்த்து வர உடல் வலிமையும், தாது பலமும் உண்டாகும்.

*கொள்ளை கஷாயமாக்கி வாரம் ஒரு முறை அருந்த உடல் உள்ளுறுப்புகளில் உள்ள தேவையில்லா அழுக்குகள் நீங்கி விடும்.

- முக்கிமலை நஞ்சன்