* 500 மிலி சுத்தமான தேனில் 200 கிராம் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை மெல்லியதாக அரிந்து தேனில் கலந்து 10 நாட்கள் வெயிலில் வைத்திருந்து பின்பு இதைக் காலையில் எழுந்ததும் ஒரு கரண்டி அருந்தினால் இரத்தம் விருத்தியாகும்.
* ஒரு பங்கு அதிமதுரத்தூளுடன் இரண்டு ஸ்பூன் சுத்த நெய்யும், இரண்டு ஸ்பூன் தேனும் கலந்து காலையில் உணவு அருந்துவதற்கு முன் சாப்பிட்டு வர உடல் வயோதிக தோற்றம் மாறி இளமை பெறும்.
* பற்களில் இரத்தக் கசிவு ஏற்படும்போது கடுக்காய், சீரகம், உப்பு இம்மூன்றையும் இடித்து தூள் செய்து தினமும் பல் துலக்கி வந்தால் ரத்தக்கசிவு நிற்கும்.
* பசலைக்கீரையின் தளிரைக் கிள்ளிச் சாறு பிழிந்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் தொண்டைக் கமறல் உடனே நிற்கும்.
* வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் வெளியில் போகும்போது ஒரு துண்டு வெங்காயத்தை கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். அதிக வெயிலால் மயக்கமோ, தலைச் சுற்றலோ வந்தால் கையிருப்பில் உள்ள வெங்காயத்தை கசக்கி நன்றாக முகருங்கள். அதனுடைய கார நெடி, மயக்கம், தலைச்சுற்றலை சரிப்படுத்தி விடும்.
* காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
* சில பெண்களுக்கு பாதங்களில் நீர் இறங்கி வீக்கமாக இருக்கும். இதற்கு அமுக்கிராக் கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து பற்றுப் போட குணமாகும்.
* சில பெண்களுக்கு காலை நேரத்தில் இருமல் ஆரம்பித்து இரண்டு, மூன்று மணி நேரங்கள் தொந்தரவு படுத்தும். இதற்கு கடுகை பட்டுப் போல் அரைத்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து இரண்டு வேளை சாப்பிட இந்த அதிகாலை இருமல் குணமாகும்.
* தேன் ஒரு அவுன்ஸ், ஒரு முட்டையின் வெண்கரு, பசும்பால் அல்லது தண்ணீர் 2 அவுன்ஸ் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்றாகக் கலக்கி, கொடுக்க உடனே நெஞ்சு வலி நின்று விடும்.
*சில பெண்களுக்கு கண்களில் கீழ் கருவளையம் தோன்றி இருக்கும். இதற்கு காரணம் குடல் உஷ்ணம்தான். இந்த கருவளையம் நீங்க பாதாம் எண்ணெயுடன் பூசு மஞ்சள் தூளைக் கலந்து, அந்த இடங்களில் தடவி இதமாக மசாஜ் செய்ய கருவளையம் மறையும்.
*பெண்களுக்கு தேவையில்லாத இடத்தில் முடி தோன்றி பிரச்சினையை ஏற்படுத்தும். இதற்கு சித்தர்கள் கூறியுள்ள எளிய முறை இது. மஞ்சள், ரோசா, ஆவாரம், தாளகம் இவற்றை அரைத்து பசும்பாலில் கலந்து தேவை இல்லாத முடிவரும் இடத்தில் தடவ முடி உதிரும். மறுபடி வளராது.
*சில பெண்களுக்கு இருமும் போது ரத்தம் வரும். இதற்கு தினசரி காலையில் சூடான பசும்பாலில் முட்டை கலந்து, இரண்டு கரண்டி தேன் விட்டு கலக்கி குடித்து வர (48 நாட்கள்) வேண்டும். இப்படி செய்தால் ரத்தம் வருவது நிற்கும். இருமல் குணமாகும்.
*பெண்களில் சிலருக்கு முழங்கை, முழங்கால்களில் கருமை நிறம் இருக்கும். இதற்கு அந்த இடங்களில் எலுமிச்சம் பழச் சாற்றை நன்றாகத் தேய்த்து ஊறவைத்து பிறகு பயத்தமாவு போட்டு தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் முழங்கை, முழங்கால்களில் காணப்படும் கருமை நிறம் மாறி சருமம் இயல்பான நிறம் அடையும்.
*பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து அடிக்கடி சருமத்தின் மீது பூசி வந்தால் தோலானது மென்மையும் பிரகாசமும் கூடும்.
- முக்கிமலை நஞ்சன்