* மகிழ மரக்காயை/இலையை கஷாயம் செய்து வாய் கொப்பழித்தால் பல் நோய்கள் வராது.
* ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டுக் கொண்டால் பல் வலி சரியாகும்.
* படுக்கைக்கு செல்லும் முன் மாதுளம் பழம் சாப்பிட்டால் குடல் புழுக்கள் அழியும்.
* அண்ணாசிப் பழம் அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் குணமாகும்.
* உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுகளை நீக்க ஒரு பிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம்பு, சீரகம் சேர்த்து பசும்பாலில் சாப்பிடவும்.
* அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குணமாகும்.
* தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.
* நெல்லி வற்றல், பச்சைப்பயிறு கஷாயம் காலை மாலை சாப்பிட்டால் தலை சுற்றல், ரத்தக் கொதிப்பு சரியாகும்.
* தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் சரியாகும்.
* மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
* புதினா இலையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கொளாறுகள் சரியாகும்.
* அன்னாசி பழச்சாறு சாப்பிட்டால் சிறுநீர் கடுப்பு நீங்கும்.
* பாகற்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை கட்டுப்படும்.
* வாழைப் பூவை பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் கை, கால் எரிச்சல் குணமாகும்.
* கானா வாழை இலையை மைய அரைத்து பூச படுக்கைப்புண் குணமாகும்.
* ஆடா தொடா இலையை சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் சரியாகும்.
- விமலா
சடையப்பன்


