*வாய் நாற்றம் உள்ளவர்கள் நான்கு நாட்கள் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் வாய் நாற்றம் போய் விடும்.
* ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டு சாப்பிட்டால் ‘வயிற்றுப்போக்கு’ உடனே சரியாகும்.
*மஞ்சளை அரைத்து பன்னீரில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால், தேவையில்லாத இடத்தில் உள்ள ரோமங்கள் உதிர்ந்துவிடும்.
*வாந்தி வரும் உணர்வு இருந்தால் ஒரு கிராம்பையோ, ஓமத்தையோ வாயில் போட்டு நிதானமாக மென்றால் வாந்தி வராது.
*கீழாநெல்லி இலைகளை அடிக்கடி அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் அரிப்பு சரியாகும்.
*கடல் சங்கை பசும் பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாட்களில் பரு மறைந்துவிடும்.
*எட்டிக்காயை பொடி செய்து சுத்தமான தேங்காய் எண்ணெயில் கலந்து மேல் உதட்டின் மேற்பகுதியில் தடவினால் பெண்களுக்கு மீசை முளைக்காது.
*வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டால் வெங்காயத்தை துண்டாக்கி, பச்சையாக சாப்பிட்டால் எளிதில் ெசரிமானம் ஆகும்.
*கொய்யா இலைகளை மென்று தின்றால் வயிற்றுபோக்கு உடனடியாக சரியாகும்.
*கற்பூரவல்லி இலையில் இரண்டு மிளகையும், ஒரு கல் உப்பையும் வைத்து மடித்து மென்று தின்றால் தொண்டைக்கரகரப்பு சரியாகும்.
*மணத்தக்காளி இலை சிறந்த கிருமிநாசினி. காயம்பட்ட இடத்தில் இந்த சாறை பிழிந்து விட்டால் புண் விரைவில் ஆறும்.
*மண் பானை தண்ணீரை பருகினால் பலருக்கு சளிபிடிக்கும். அந்த தண்ணீரில் துளசி இலைகளைப் போட்டு பின் குடித்தால் சளி பிடிக்காது.
*கருணைக்கிழங்கு அல்லது வாழைப்பூ இதில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் மூலம் சரியாகும்.
*அதிக தாகம் எடுத்து வாய் வறண்டு போனால் கொஞ்சம் கல்கண்டை வாயில் போட்டுக் கொண்டால் தாகம் தீரும்.
- விமலா சடையப்பன்.