மும்பை: உணவு டெலிவரி தளத்தில் ரூ.50க்கு VIP Mode-ஐ Zomato அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து வருகின்றனர். புட் ஆர்டர் செய்யும் வழக்கம் பெருமளவில் அதிகரித்து விட்டது. இன்றைய காலத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், உணவுகளுமே ஆன்லைனில் ஆர்டர் செய்து மக்கள் சாப்பிடலாம்.ஹோட்டல் சென்று சாப்பிடுவதற்கோ, பார்சல் வாங்குவதற்கோ நேரம் இல்லாதவர்கள் தாங்கள் விரும்பிய உணவுகளை இருக்கும் இடத்திலேயே ஆன்லைனில் ஆர்டர் செய்கின்றனர்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் புட் ஆர்டர் தளங்களில் ஸ்விகி, சொமேட்டோ மிகவும் பிரபலமானது. இத்தகைய தளங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், உணவு டெலிவரி தளத்தில் முன்னணியில் உள்ள Zomato செயலியானது, ரூ.50க்கு VIP Mode-ஐ அறிமுகப் படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆர்டருக்கும் இதனை தேர்வு செய்வதன் மூலம் விரைவான டெலிவரி, மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை ஆகியவை கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.