காந்திநகர்: குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு குஜராத், சௌராஷ்டிர மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் போர்பந்தர், சோம்னாத், மாதவிப்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. போர்பந்தர் உள்ள கொரடாச்சேரி நிரம்பி வழிவதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சௌராஷ்டிர, கட்ச் சாலை வெள்ளக்காடாக கட்சி அளிக்கிறது. அதே போல நர்மதா நதி உட்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆறுகள் நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால் தாழ்வான பகுதிகள் வெள்ளம் சூழ்ந்தது. குஜராத் 95% விழுக்காட்டுக்கு மேற்பட்ட அணைகள் தற்போது நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சர்வதரோ அணை உள்ளிட்ட அனைத்து முக்கியமான அணைகளும் முழு கொள்ளளவு நிரம்பிவருகின்றன. அடுத்த சில நாட்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒன்றிய அரசும்,பேரிடர் மேலாண்மை குழுக்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.