இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் 1000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டார்கள். 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று அதிகப்படியான மழை ஆசிர்வாதம் என்று பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுததி உள்ளது.
அவர் நேற்று கூறுகையில்,’
அதிகப்படியான மழையைஆசீர்வாதத்தின் அடையாளமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது இந்த தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். சாலை மறியல் செய்பவர்கள், அதை விடுத்து தண்ணீரை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று சேமித்து வைக்க வேண்டும். அவர்கள் அதை எங்காவது, ஏதாவது ஒரு கொள்கலனில் சேமித்து வைக்க வேண்டும். இந்த மழை நீரை சேமித்து வைப்பதன் மூலம் நாம் அதற்கு ஒரு ஆசீர்வாதத்தின் வடிவத்தைக் கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.