மேட்டுப்பாளையம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் மீன்பிடி குத்தகையை சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கம் மற்றும் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் இணைந்து எடுத்துள்ளன. நேற்று இரு சங்கங்களின் சார்பில் வளர்க்கப்பட்ட கட்லா மீன் குஞ்சுகளை நீர்த்தேக்க பகுதியில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிறுமுகையை அடுத்துள்ள காந்தவயல் நீர்த்தேக்க பகுதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் சுமார் 1.5 லட்சம் கட்லா மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக உதவி மேலாளர் ஆனந்தி மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் பவானிசாகர் சுப்ரமணியன், சிறுமுகை மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.