Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முதன்முறையாக 11ம் தேதி டான்பிநெட் வழியாக 10 ஆயிரம் கிராமசபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் ஆஸ்திரேலியா மெல்போர்ன் பல்கலைக் கழகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஆஸ்திரேலியாவின் தலைமை தூதர் சிலைஜாகி, தமிழக தகவல் தொழில்நுட்பத்துறையின் முதன்மைச் செயலாளர் ப்ரஜேந்திர நவ்நீத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: காந்தி ஜெயந்தி அன்று நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டம் 11ம் தேதி நடக்க இருப்பதால் அப்போது கிராம சபைக் கூட்டத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி 10 ஆயிரம் கிராமங்களில் உள்ளவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளில் நேரலையாக ஒளிபரப்பாகும்.

இந்தியா மொபைல் காங்கிரஸ் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு பாரத் நெட் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி அளியுங்கள் எனவும், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வரும் டான்பிநெட் தொடர்ந்து இயங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம். தமிழ்நாட்டில் 50 சதவீதம் மக்கள் பெரிய நகரங்களில் வாழ்கின்றனர் அவர்களுக்கு 300 எம்பிபிஎஸ் நெட் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் செல்போன் பயன்பாடு உள்ளதால், அதை மாற்றி அனைத்து அரசு அலுவலகங்களையும் பார்த் நெட் மூலம் இணைக்க உள்ளோம். பார்த் நெட் திட்டத்திற்கு ரூ.660 கோடி நிதி மத்திய அரசு அளிக்க வேண்டும் என கேட்டுள்ேளாம். தற்பொழுது கிராமங்களில் ஏற்படுத்த உள்ள இணையதளத்தின் வேகத்தை குறைக்க விரும்பவில்லை.

மாதம் ரூ.199 பிளானில் கொடுக்க உள்ளோம். இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு இணையவசதி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பைர் கேபிள் வயர்கள் மூலம் இணைப்பு வழங்க முதற்கட்டமாக 5196 கிராமத்திற்கு விண்ணப்பம் கேட்கப்பட்டது. அதில் 4886 கிராமத்திற்கு இணைப்பு வழங்கும் சிறுதொழில் முகவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மற்ற கிராமங்களுக்கு இதுவரையாரும் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் தமிழ்நாட்டில் 12552 கிராமங்களுக்கும் பார்த் நெட் சேவை கொண்டுச்செல்லப்படும். இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.