முதல் ஆளில்லா விண்வெளி திட்டத்தை 2026 தொடக்கத்தில் அமல்படுத்த இந்தியா இலக்கு நிர்ணயிப்பு: சுபான்ஷ சுக்லா உறுதி
டெல்லி: முதல் ஆளில்லா விண்வெளி திட்டத்தை 2026 தொடக்கத்தில் அமல்படுத்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷ சுக்லா உறுதிப்படுத்தி உள்ளார். இந்திய சர்வதேச விண்வெளி கருத்தரங்கத்துக்கு பின் ஆளில்லா விண்வெளி திட்டம் குறித்து சர்வதேச விண்வெளி நிலையம் சென்று திரும்பிய சுபான்ஷ சுக்லா தகவலை உறுதி செய்தார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2027ல் இந்தியா செயல்படுத்தும். தன்னுடைய அனுபவத்தை இந்தியாவின் விண்வெளி திட்டத்துக்கு பகிர்ந்திருப்பதாக சுபான்ஷ சுக்லா கருத்து தெரிவித்தார்.


