சென்னை: தீயணைப்பு துறைக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 6,500 பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளது. தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த சனிக்கிழமை வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 4,390 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு அதிகாரிகள் ெதரிவித்துள்ளனர்.
பட்டாசு கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதனால், பட்டாசு கடைகள் அமைக்கும் பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் நேரில் சென்று, கட்டப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அனுமதிக்கான கடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.