ப்ரசிலியா: பிரேசிலில் நடைபெற்று வரும் காலநிலை மாநாட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரேசிலின் பெலெம் நகரில் ஐ.நா. காலநிலை மாநாடு நடைபெற்று வருகிறது. பிரேசிலில் நடைபெற்று வரும் காலநிலை மாநாட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காலநிலை மாநாட்டில் உள்ள அரங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் காயம் அடைந்தனர். தீ விபத்து ஏற்பட்டபோது ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.
இந்தியா சார்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் உள்பட 20 பேர் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். தீ விபத்தை அடுத்து அமைச்சர் பூபேந்திர யாதவ் உள்பட இந்திய குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்


