தி.மலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருணாச்சலேஸ்வரர் மலையில் மர்ம நபர்கள் சிலர் நெருப்பு வைத்ததால் மூலிகை செடிகள் எரிந்து சேதமாகியுள்ளது. அண்ணாமலையார் கோயில் மலையில் தீ வைத்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துறையினரும் மலை பாதுகாப்பு குழுவினரும் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
+
Advertisement