Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தீ விபத்தால் சுமார் 2 ஏக்கரில் இருந்த குப்பைகள் எரிந்து சேதம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்டு ஈசான்ய லிங்கம் பக்கத்தில் அமைந்து உள்ளது. ஈசான்ய திடல். இந்த திடலில் தற்போது மாநகராட்சிக்குட்பட்டு 14 ஏக்கரில் குப்பை கடங்கானது உள்ளது. இந்த குப்பை கடங்கில் திருவண்ணாமலை மாநகர்ட்ச்சிக்கு உட்படு அனைத்து வார்டுகளில் இருந்தும் தினம்தோறும் சேகரிக்கபடும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் இந்த இடத்தில் தனித்தனியாக பிரித்துவைக்கப்பட்டு இங்கு இருந்து பயோ மைனிங் செய்யக்கூடிய இடத்திற்கு கொண்டுசெல்லபடுகிறது.

அதேபோல் அந்த மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் செயல்முறைகளும் இங்கு இருந்து குப்பைகளை எடுத்து சென்று பிரித்து எடுக்கப்படுகிறது. குறிப்பாக இந்த நிலையில் நேற்று இரவு முதல் திருவண்ணாமலையில் அந்த ஈசான்ய தெருவில் 14 ஏக்கரில் அமைந்து உள்ள அந்த குப்பை கடங்கில் திடீர் என தீ பற்றி எரிந்தது இது குறித்து தகவல் அறிந்து நகராட்சி ஊழியர்களும் தீ அணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு இரவு முதல் வந்து சுமார் 3க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீ அணைக்கும் பணிகளில் நேற்று இரவு பகல் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள்.

குறிப்பாக அதிகாலை முதல் காற்றின்னுடைய வேகம் அதிகரித்து காணப்படுவதால் தீ மளமளவென பரவி மாநகர பல்வேறு இடங்களில் புகை மண்டலமாக கட்சி அளிக்கிறது. குறிப்பாக சாலை என்பது சென்ட்ரல் நகர், மின் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகள் நேற்று இரவு முதல் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். அந்த பகுதி வழியாக பல்வேறு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் வாகன ஓட்டிகளும் காலை முதல் கடும் அந்த புகை மூட்டத்தில் நுழையும் படி செல்கின்றார்கள்.

பல்வேறு நபர்களுக்கு அங்கு மூச்சுதிணறல் ஏற்படும் சூழலும் காணப்படுகிறது. இது தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் திருவண்ணாமலை மாநகர பகுதில் சேகரிக்கப்படும் அந்த குப்பைக்களில் அதிக அளவில் தீபம் ஏற்றக்கூடிய அகல்விளக்கு காணப்படுவதாகவும் அதிலில் இருந்து வரக்கூடிய சனலின் முலமாக தீ விபத்தானது ஏற்பட்டுருக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

தற்போது 12 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து அந்த தீ ஆனது கட்டுக்குள் வராமல் தீ அணைப்பு துறையினர் மிகுந்த அவதிப்பட்டு அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு உள்ளார்கள் நேற்று இரவு முதல் இந்த இடத்திலேயே மாநகராட்சி ஊழியர்களும் அந்த தீயை கட்டுக்குள் கொண்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இருந்தபோதிலும் சுமார் அந்த 14 ஏக்கரில் கொட்டப்பட்டிருந்த அந்த குப்பைகளில் 400டன் குப்பைகள் எரிந்து இருக்கலாம் எனவும் மாநகராட்சி நிர்வாகத்தின் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 மணி நேரத்தை கடந்தும் தீ கட்டுக்குள் வராமல் மிகுந்த போராட்டத்தை தீ அணைப்பு துறையினர் செய்துவருகின்றனர். விரைவில் இந்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்படும் என மாநகராட்சி நிர்வாகிகளும் தீ அணைப்பு துறையினரும் தகவல் தெரிவித்து உள்ளனர் .