சென்னை: ரூ.10.54 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் ஜி.வி. பிலிம்ஸ் நிர்வாகி அப்துல் ஹமீதுக்கு ஓராண்டு சிறை விதிக்கபப்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் ரூ.10.54 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாக வழக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மோசடி புகாரில் தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன், வங்கி அதிகாரிகள் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 1996ல் வழக்கு பதிவான நிலையில் 2023ல் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். வங்கி அதிகாரிகள் 3 பேர் மரணமடைந்த நிலையில் வழக்கில் இருந்து 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்கள் மீதான வழக்கை சென்னை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. வங்கி கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன் சுவாமிநாதன் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement