சேலம்: தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு தமிழக முதல்வர் பெயரை வைக்க கூடாது என சுப்ரீம் கோர்ட்டில், சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக ஏன் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீர்கள் என கடுமையாக எச்சரித்து ரூ.10 லட்சம் அபராதமும் விதித்தது. இந்த அபராதத்தை ஒரு வாரத்தில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், அபராத தொகை கட்டுவது தொடர்பாக சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். பணத்தை கட்டலாமா அல்லது மேல்முறையீடு செய்யலாமா? என்பது குறித்து விவாதித்தனர். அதேபோல முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.