சென்னை: நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவுக்கு அக்டோபர் 30 ஆம் தேதி வரை இடைகால ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொந்த பணமாக 100 கோடி ரூபாயை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நிதிமனறத்தில் டெபாசிட் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பச் செலுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; நிபந்தனைகளை மீறினால் மீண்டும் சிறை செல்ல நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
+
Advertisement