வாஷிங்டன்: அமெரிக்க அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மசோதாவை நாடாளுமன் றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு நிர்வாகம் முடங்கியது. ஊதியம் கிடைக்காததால் இந்நிலையில், தங்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், ஜனநாயக கட்சியினர் சிலர் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த திங்களன்று செனட் சபையில் மசோதா நிறைவேறியது. அடுத்ததாக, பிரதிநிதிகள் சபையில் மசோதாவுக்கு நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து 43 நாட்களுக்கு அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது.
