அன்னூர்: இரட்டை இலையை மீட்கும் வரை போராடுவோம் என அதிமுக முன்னாள் முதல்வர ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கோவை மாவட்டம் அன்னூர் அருகே நால் ரோட்டில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்க நேற்று காலை வந்தார். அன்னூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘இரட்டை இலையை மீட்கும் வரை சட்டபூர்வமான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம், போராடுவோம். சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடரும். உண்மை தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம்தான் உள்ளனர்’’ என்றார்.
+
Advertisement