புதுடெல்லி: சுற்றுலா மற்றும் பண்டிகை காலத்தின் உச்சத்தை முன்னிட்டு காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக விமான நிலையங்களில் போதுமான அளவிலான இமிகிரேஷன் கவுன்டர்களை திறக்க வேண்டும் என்று சர்வதேச விமானநிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டு்ள்ளது. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில்,‘‘ சுற்றுலா மற்றும் பண்டிகை காலங்கள் விரைவில் வரவிருக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் சர்வதேச விமான நிலையங்களில் இமிகிரேசன் கவுன்டர்கள் போதுமான அளவில்திறக்கவும், 24 மணி நேரம் அதிகாரிகள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் காத்திருப்பு நேரம் குறையும்’’ என்றனர். டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், அகமதாபாத், லக்னோ, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, கோழிக்கோடு மற்றும் அமிர்தசரஸ் ஆகிய 13 முக்கிய விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற அனுமதியை உறுதி செய்யும் வகையில் விரைவு பாதை குடியேற்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.
+
Advertisement