சென்னை: திருவிழாவுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை 7 நாட்களில் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலதாமதத்தால் திருவிழாவுக்கு வசூலித்த நிதி, நீதிமன்றத்தில் வழக்கு செலவுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது. விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரியே விழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும் என நீதிபதி தெரிவித்துள்ளார். கோவை பாப்பம்பட்டி வீரமாத்தி அம்மன் கோயில் திருவிழாவில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement