சென்னை: பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரவாயலில் உள்ள வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்த வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு அடிப்படையில் தேனி காவல்துறை சோதனை நடத்தி வருகிறது.
+
Advertisement