திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்தவர் பிரபல ராப் இசை பாடகர் வேடன். அவர் மீது கொச்சியை சேர்ந்த பெண் டாக்டர் பலாத்கார புகார் கொடுத்திருந்தார். அதன் பேரில் திருக்காக்கரை போலீசார் ராப்பர் வேடன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ராப்பர் வேடன் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை நாளைக்கு (இன்று) ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ராப்பர் வேடனை கைது செய்ய தடை விதித்தார்.
இந்தநிலையில் ராப்பர் வேடன் தங்களையும் பலாத்காரம் செய்ததாக கூறி 2 இளம்பெண்கள் புகார் கொடுத்துள்ளார். புகார் கொடுத்த இளம்பெண் இசை ஆராய்ச்சி செய்யும் மாணவி ஆவார்.வேடனின் பாட்டில் மயங்கிய மாணவி, அவரை பலமுறை நேரில் சந்தித்துள்ளார். அப்போது பல இடங்களில் வைத்து தன்னை வேடன் பலாத்காரம் செய்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். புகார் கொடுத்த அடுத்த இளம்பெண் ரசிகை முதல் சந்திப்பிலேயே வேடன் பலாத் காரம் செய்துள்ளார்.