சென்னை: சென்னை முகப்பேரில் ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவர் கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் மல்லிகா கொலை வழக்கில் திருப்பூரில் பதுங்கி இருந்த வெங்கடேஷ் பாபுவை போலீசார் கைது செய்தனர். தனது நிலத்தை விற்றுவிட்டு மகளுடன் அமெரிக்கா செல்ல உள்ளதாக ஓட்டுநர் வெங்கடேஷ் பாபுவுடன் கூறியுள்ளார். நகை, சொத்துகளை அபகரிக்க திட்டமிட்டு 2014ல் மருத்துவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து ஓட்டுநர் கொலை செய்தார். வழக்கில் 3 பேர் கைதான நிலையில் 2017ல் ஜாமினில் வந்த வெங்டேஷ் பாபு தலைமறைவாகி விட்டார்.
+
Advertisement 
 
 
 
   