Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பெண் ஆசை காட்டி 100 பேரிடம் பணம் பறித்த கில்லாடி இளம்பெண்: பரபரப்பு தகவல்கள்

புதுச்சேரி: சமூக வலைதளங்களில் பெண் ஆசை காட்டி நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த கடலூர் பெண்ணை புதுச்சேரி சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது வாட்ஸ்அப்பில் கடந்த 13ம் தேதி ஒரு தகவல் வந்துள்ளது. அதில், உல்லாசமாக இருக்க பெண் வேண்டுமா? என கூறப்பட்டிருந்தது. இந்த தகவலை பார்த்த விக்னேஷ் அதில் வந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, மறுமுனையில் ஒரு பெண் பேசினார்.

பெண்கள் சம்பந்தமாக எவ்வளவு பணம், எப்போது அனுப்புவீர்கள்? போன்றவற்றை விக்னேஷ் பேசிவிட்டு, பெண்களுடைய புகைப்படத்தை அனுப்ப சொல்லியுள்ளார். உடனே 5க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடைய புகைப்படத்தை அனுப்பிய அந்த பெண், அதில் உங்களுக்கு யார் வேண்டும்? என்று கேட்டபோது, ஒரு பெண்ணின் புகைப்படத்தை விக்ேனஷ் தேர்வு செய்து அனுப்பி உள்ளார். பின்னர் ஒரு இரவுக்கு 10 ஆயிரம் ரூபாய் ரேட்பேசி முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை ஜிபே மூலமாக அந்தப்பெண் பெற்றுள்ளார்.

பின்னர் முத்தியால்பேட்டையில் ஒரு இடத்தைக்கூறி, அங்கே காத்திருக்கும்படி கூறியுள்ளார். விக்னேஷ் அந்த பெண் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தும் யாரும் வரவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர், புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு, அந்த வங்கி கணக்கு மற்றும் அவர் தொடர்பு கொண்ட எண் ஆகியவற்றை வைத்து, மேற்கண்ட பெண் யார்? என்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட பெண் கடலூரை சேர்ந்த காயத்ரி (35) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை டவுன்லோடு செய்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை 100 பேரிடம் பணம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

காயத்ரியின் வங்கி கணக்கில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என 4 லட்சம் ரூபாய்க்கு மேல் வந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.