நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி யோகாநகரை சேர்ந்தவர் மயில்கண்ணன் (68). ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டரான இவர், மனைவி பிரிந்து சென்றதால் மகள் பிரீத்தியுடன் (34) தனியாக வசித்து வந்தார். மகன் பிரதீப் அமெரிக்காவில் உள்ளார். இவர், கடந்த 10 ஆண்டாக சொந்த ஊருக்கு வரவில்லை என கூறப்படுகிறது. தந்தை, மகள் இருவரும் சர்க்கரை நோயால் அவதிக்குள்ளாகி வந்ததால், அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களை கவனித்துக் கொள்ள உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. இதனால், இருவரும் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியில் இருவரும் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
+
Advertisement
