சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பயிர் காப்பீட்டிற்கான காலம் நேற்றுடன் முடிவடைந்தது. பெரும்பாலான விவசாயிகளால் பயிர் காப்பீட்டை உரிய காலத்தில் செலுத்த போதிய வருவாய் கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தமிழக அரசு, பயிர் காப்பீடு செய்வதற்கான கால நீட்டிப்பை பெற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


