சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவாலியில் சுமார் 132 ஏக்கர் பரப்பளவில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் 17 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக அமைந்துள்ளது.
இந்த ஏரியில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கிறது இந்த ஏரி நீரை பயன்படுத்தி சுமார் 550 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி பணிகளை செய்து வருகின்றன.
தற்போது ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் மண்டி காணப்படுகிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசடைந்து வருவதாகவும் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதில் காலதாமதம் ஏற்படதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டை வருகின்றன.விவசாயிகள் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் ஏரியில் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.