வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை என வேதனை: இழப்பீடு, வட்டி இல்லாத கடன் வழங்க விவசாயிகள் கோரிக்கை
தென்காசி: சங்கரன்கோவில் பகுதிகளில் வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு அறுவடையானது நடந்து வருகிறது. இந்த நிலையில், நொச்சிக்குளம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விவசாயிடம் நேரில் சென்று அவரிடம் விசாரித்தபோது மூன்றரை ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டு வந்ததாகவும், இதற்கு ரூ.2.80 லட்சம் வரை செலவு செய்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து சின்ன வெங்காயமானது ரூ.15 முதல் ரூ.20 வரை தரம் வாரியாக கொள்முதல் செய்யப்படுவதால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் ஏக்கர் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 30,000 இருந்து 60,000வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசு இதற்கு உண்டான உரிய நிவரனை அளிக்கவேண்டும் அல்லது தங்களுக்கான விவசாயித்திற்கான அந்த மானியம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.