சம்பா, தாளடி பருவங்களுக்கு ஏற்ற புதிய உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 20 முதல் 22 லட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் குறுவை, நவரை மற்றும் கோடைக் காலங்களில் 6 முதல் 8 லட்சம் எக்டரிலும், சம்பா மற்றும் தாளடிப் பருவங்களில் சுமார் 14 முதல் 16 லட்சம் எக்டரிலும் பயிரிடப்படுகிறது. சம்பா மற்றும் தாளடியில் நீண்டகால (145 முதல் 160 நாட்கள்)...
வெங்காய விதை சேமிப்பிற்கான செயல்முறைகள்!
சின்ன வெங்காயம் விதை உற்பத்தி செய்வதற்கான சில வழிமுறைகள் குறித்து கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியாக விதை பிரித்தெடுப்பு, உலர்த்துதல், சுத்திகரிப்பு உள்ளிட்ட செயல்முறைகள் குறித்து இந்த இதழில் காண்போம். அறுவடை செய்யப்பட்ட பூங்கொத்துக்களில் இருந்து விதைகளை பிரித்தெடுத்து அதன் தரத்தினை மேம்படுத்துதல் மிக அவசியம். விதை பிரித்தெடுக்கும்போது விதை காயப்படாமல் பிரித்தெடுக்க வேண்டும்....
அருகம்புல் சூப்... தூதுவளை தேநீர்...மதிப்புக்கூட்டினால் மெகா வருமானம்!
நான் மாஸ்டர் டிகிரி படிச்சிட்டு, 10 வருஷம் கணித ஆசிரியரா இருந்தேன். ஆசிரியர் வேலையை செஞ்சிக்கிட்டே, இயற்கை விவசாயமும் செய்ய ஆரம்பிச்சேன். இயற்கை விவசாயத்தில் இறங்கி, பலன்களையும் விளைச்சலையும் பார்த்த பிறகு வேலையை விட்டுட்டு முழுநேர விவசாயியா மாறினேன். இப்போ எங்க விளைபொருட்களை நானே மதிப்புக்கூட்டி விக்கறேன். நூற்றுக்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டிய பொருட்களை உற்பத்தி செய்றோம்”...
வேலூர் விவசாயி உருவாக்கிய புதுரக வெண்டை!
விவசாயம் தெரிந்தாலே போதும். வேறு தொழில் இல்லாவிட்டாலும் பிழைத்துக்கொள்ளலாம் என்பதற்கு பலர் உதாரண புருஷர்களாய் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் பெருமாள் நகரைச் சேர்ந்த பாபு. தனியார் ஐ.டி.ஐ கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவருக்கு கொரோனா காலத்திற்குப் பிறகு வேலை இல்லாத சூழல். இருந்தபோதும் தனக்குத் தெரிந்த விவசாயத் தொழிலைக் கையில் எடுத்து,...
மழைக்காலமும்... கால்நடை பராமரிப்பும்!
மழைக்காலத்தில் கன்று பராமரிப்பு மழைக்காலத்தில் பிறக்கும் கன்றுகள் ஈரப்பதம் மற்றும் குளிரினால் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. எனவே மழைக்காலத்தில் கன்றுகளை நனையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் கன்றுகள் கதகதப்பான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். தரையில் வைக்கோல் பரப்புதல், பக்கவாட்டில் குளிர் தாக்கம் ஏற்படாமல் இருக்கக் கோணிப்பைகளைக் கட்டுதல், இரவு நேரத்தில் கன்றுகளின் மேலே...
மழைநீரில் மூழ்கிய நெற்பயிரைக் காக்க...
கடலூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 66800 எக்டர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழையினால் வயல்களில் நீர் தேங்கியிருக்கும் சூழல் உள்ளது. வயல்களில் நீண்ட நாட்கள் மழைநீர் தேங்கியிருக்கும்போது, போதிய காற்றோட்டம் இல்லாததாலும், மழைநீர் வடியும்போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து கரைந்து வெளியேறு வதாலும்...
ஐந்தடுக்கு முறையில் ஆர்கானிக் ஃபார்மிங்... 25 வகையான பயிர்கள்!
விவசாயம் செய்வதற்கு வேளாண் தொழில் தெரிந்தாலே போதும். குறுகிய இடத்திலும் நிறைவான லாபம் பார்க்கலாம். அதற்கு உதாரணமாய் இருப்பவர்தான் கோவை கிணத்துக்கடவுக்கு அருகேயுள்ள மெட்டுவாளி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து. ஆம். தனக்குச் சொந்தமான 60 சென்ட் நிலத்தில் 25 வகையான காய்கறிகள் சாகுபடி செய்து வருகிறார். அதுமட்டுமல்ல, ஐந்தடுக்கு முறையில் பயிர்களை பயிரிட்டு தினமும் ஏதாவதொரு...
நெல், வேர்க்கடலையில் நேர்த்தியான லாபம்... ஆர்கானிக் விவசாயத்தில் சாதிக்கும் பசுபதி!
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள பாலூர் கிராமத்தில் ஒரு காலத்தில் ஊர் முழுக்க விவசாயம் செழித்தோங்கியது. இப்போது அங்கு பத்தில் ஒரு பங்கு நிலத்தில் மட்டும்தான் வெள்ளாமை நடந்து வருகிறது. அதில் எப்போதும் பச்சைப் பசேலென காட்சி தரும் நிலமாக விளங்குகிறது பசுபதியின் விவசாய நிலம். சொந்தமாக எட்டு...
1 ஏக்கர்... 3 ஆண்டுகள்... ரூ.4 லட்சம்...சரியான லாபம் தரும் சவுக்கு!
சென்னை - கும்பகோணம் பிரதான சாலையில் அமைந்துள்ள காடுவெட்டி என்ற கிராமத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி செல்கிறது ஒரு குக்கிராம சாலை. அந்த சாலையின் இருபுறமும் நெல், நிலக்கடலை, கம்பு, செடி முருங்கை என பலவிதமான பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. இந்த சாலையில் சுமார் 5வது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் திருக்களப்பூர் என்ற சின்னஞ்சிறு கிராமத்திலும் மேற்சொன்ன...
