Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

பொன்னேரி: பொன்னேரியில், இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனம் சார்பில் நானோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முறையில் விவசாயிகளுக்கு பிரச்சார பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

அந்நிறுவனத்தின் மாநில விற்பனை மேலாளர் சுரேஷ் தலைமையில் கள அலுவலர்கள் காளிதாசன், சந்துரு மற்றும் பொன்னேரி சரக கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்கள் சசிகுமார், பாஸ்கர் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

இப்கோ நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில், பொன்னேரி தாலுகாவில் ”நானோ மாதிரி கிராமங்கள் உருவாக்கப்பட்டு சுமார் 2000 ஏக்கருக்கு மேல் நெல் பயிரில் நானோ உரங்கள் டிரோன் மூலம் மானிய விலையில் தெளிக்கப்படும். இந்த திட்டம் இப்கோ நிறுவனத்தின் மேலாளண்மை இயக்குனர் அவஸ்தி மூலம் அகில இந்திய அளவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்