கவுகாத்தி: பிரபல அசாம் பாடகர் ஜூபின் கர்க், சமீபத்தில் சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு, கடலுக்கு அடியில் டைவிங் சென்றபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் அசாம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து,இது குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், சிங்கப்பூருடன் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் செய்வதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அசாம் அரசு முறைப்படி கடிதம் எழுதியுள்ளது. இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால் குற்றவாளிகளை இந்தியாவுக்கு அனுப்பவும் வழக்கு விவரங்களை பெற முடியும்.என்று மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
+
Advertisement